Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவி என்பது தியாகத்தின் வண்ணம்.. தூர்தர்ஷன் விவகாரத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி..!

காவி என்பது தியாகத்தின் வண்ணம்.. தூர்தர்ஷன் விவகாரத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி..!

Mahendran

, திங்கள், 22 ஏப்ரல் 2024 (09:08 IST)
தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோ சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் "தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை" என  கண்டனம் தெரிவித்து இருந்தார்.

முதல்வரின் கண்டனத்திற்கு தற்போது தமிழிசை செளந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

ஆகாஷவாணி என்ற  பெயரை தூர்தர்ஷனுக்கு  வைத்ததே காங்கிரஸ் தான், அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற பெயரை வைத்ததே காங்கிரஸ் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்,

மேலும் காவி என்பது தியாகத்தின் வண்ணம், தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி, காவி வண்ணத்தில் இலச்சினையை மாற்றுவது தவறில்லையே. DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்ரா பவுர்ணமி தினத்தில் கிரிவலம்.. திருவண்ணாமலைக்கு 1,820 சிறப்பு பேருந்துகள் இயக்கம்