அக்கா தமிழிசை போட்ட டிவிட்: வரிந்துகட்டி திட்டி தீர்த்த டிவிட்டர் தம்பிகள்!!

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (09:36 IST)
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீட் தேர்வு குறித்து போட்ட டிவிட்டை கண்ட டிவிட்டர்வாசிகள் அவரை திட்டியுள்ளனர். 
 
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் 48%-க்கும் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட் 9% அதிகமாகும்.
 
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தற்கொலை செய்துக்கொண்டர். இது மாணவிகளின் உறவினர்களுக்கும் அந்த ஊர் மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் நீட் குறித்து டிவிட் போட்டுள்ளார். அதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும்...
 
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துவண்டு போகாமல் மறு முயற்சி செய்து தோல்வியை வெற்றிக்கு படிகட்டாக்க வேண்டும். தற்கொலை போன்ற முடிவுகள் தீர்வாகாது என்பதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். 
 
இதை கண்ட டிவிட்டர் பயனர்கள் பதிலுக்கு தங்களது ஆதங்கத்தை கமெண்ட் செய்து தமிழிசையை திட்டி வருகின்றனர். என்னத்தான் திட்டினாலும், பலர் தமிழிசையை அக்கா என்று குறிப்பிட்டே திட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments