Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவில்லை: தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:39 IST)
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சென்னையில் இன்று பேட்டி அளித்த போது தான் ஏன் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் 
 
நேற்று முதல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் அரசியல் தலைவர்கள் யாரும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை 
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தான் ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை இன்று சென்னை வந்தபோது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது
 
நான் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் முன்கள பணியாளர் ஒருவருக்கு ஒரு ஊசி குறையும் என்பதால் தான் எடுத்துக் கொள்ளவில்லை: தாமரை போன்ற முக மலர்ச்சியோடு மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments