இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தானும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதலாவதாக இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலில் தடுப்பூசிகளை அரசியல்வாதிகள், அமைச்சர்கள் போட்டு கொள்ள வேண்டும் என எதிர்கட்சியினர் பலர் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் “பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் முறை வரும் போது நானும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.