தமிழம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று கொரோனா தடுப்பு ஊசி போட தொடங்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
நேற்று காலை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு போடும் பணி தொடங்கப்பட்டு சுமார் 25,000 பேர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்த நிலையில் திடீரென கோவிட் செயலியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால் ஊசி போட வேண்டி அவர்களுக்கு தகவல் சென்று சேரவில்லை என கூறப்படுகிறது
இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய தீவிர முயற்சி நடந்து வருவதாகவும் இரண்டு நாட்களில் இந்த கோளாறு சரி செய்தபின் கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என்றும் கூறப் படுகிறது
இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் வரை கோவில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் தொடர்ச்சியாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது