ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க 90 சதவீத பணிகளை முடித்து விட்ட நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று கேள்விகள் எழுந்து கொண்டே இருப்பது வருத்தத்தை தருவதாக தமிழரின் தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
ரஜினிகாந்த் மாபெரும் மக்கள் சக்தியாக இருக்கிறார் என்பதாலே அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று கவலை கொள்கின்றனர் என்றும் அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் நம்முடைய ஆட்சி கனவு கலைந்துவிடும் என்று ஒரு தரப்பினரும், அவர் வந்து விட்டால் நாம் நாற்காலியில் இருந்து அகற்றப்பட்டு விடுவோம் என்று இன்னொரு தரப்பினரும் பயப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்
மேலும் ரஜினி அரசியலுக்கு வருவது வருவது தவிர்க்க முடியாதது என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி இன்று கவிழ்ந்துவிட்டால் கூட அவர் நாளையே கட்சி தொடங்கிவிடுவார் என்றும் மேலும் கூறினார்
அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும் தேர்தலிலுக்கு முன்பே அவர் படங்களை முடித்துவிடுவார் என்றும் இதற்கு உதாரணமாக ’மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்ஜிஆர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் அந்த படத்தை முடித்த பின்னர் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார் என்ற வரலாறும் இருக்கிறது என்று தமிழன் மணியன் தெரிவித்தார்
தெலுங்கு மக்களின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிய என்டி ராமராவ் ஆறே மாதங்களில் ஆட்சியை பிடித்த மாதிரி தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பிக்கும் ரஜினிகாந்த் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.