தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முதலமைச்சராக 6-வது முறையாக பத்வியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்து வரும் கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடவும் மது கடைகளின் நேரம் திறப்பை காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணி என குறைத்தும் உத்தரவிட்டிருக்கிறார்.
விவசாயிகளின் ரூ.5780 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி. வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம், கைத்தறிகளுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கிடும் உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார் மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராமுக்கு பதிலாக 8 கிராம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான இத்தகைய புரட்சிகரமான உத்தரவுகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்விற்கு வாழ்வுரிமைக் கட்சியின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் சேர ஆதரவு தெரிவித்து கடைசியில் எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுகவுக்கு தலைமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.