Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக இளைஞர்கள் கோழைகள்: எதற்காக மார்கண்டேய கட்ஜூ சொல்கிறார் தெரியுமா?

தமிழக இளைஞர்கள் கோழைகள்: எதற்காக மார்கண்டேய கட்ஜூ சொல்கிறார் தெரியுமா?

Advertiesment
தமிழக
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (11:19 IST)
முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று.


 
 
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாக சர்ச்சை கருத்தை தெரிவித்து, பின்னர் அது நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்ட கருத்து என கூறி பல்டியடித்தார். இந்நிலையில் தமிழக இளைஞர்களை நான் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு எனவும் கோழைகள் எனவும் கூறவேண்டி வரும் என கூறியுள்ளார்.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த காவல்துறை, பலர் மீது வழக்கும் 7 பேரை கைதும் செய்தது.
 
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த கைது நடவடிக்கைகளை கண்டித்து கருத்து தெரிவித்த போது தான் அவாறு கூறினார் மார்கண்டேய கட்ஜூ.

webdunia

 
 
அவரது பதிவில், இந்த சட்டவிரோத போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் உடனடியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டும். இல்லையென்றால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, அவர்கள் கோழைகள். அரசியல் சாசனம் உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள். சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என மர்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நன்கொடை பணம்: ரூ.16 கோடியில் ஊழல் செய்த ஆம் ஆத்மியினர்