ஆம் ஆத்மி கட்சிக்கு அளிக்கப் பட்ட நன்கொடையில் ரூ.16 கோடி மாயமாகிவிட்டது என்று அதிருப்தி எம்எல்ஏ தேவேந்தர் ஷெராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பிஸ்வாஸன் தொகுதி எம்எல்ஏ தேவேந்தர் ஷெராவத் அண்மையில் ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டார்.
கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடையில் ரூ.16 கோடி திருடப்பட்டுள்ளது. அந்த வகையில் 1600 நன்கொடையாளர்களின் பெயர்கள் மறைக்கப் பட்டுள்ளன. இது உயர்நிலை தலைவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்காது.
நேர்மையான கட்சி என்று கூறும் ஆம் ஆத்மி இதுபோன்ற பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.