Publish Date: Sun, 18 Oct 2020 (07:57 IST)
Updated Date: Sun, 18 Oct 2020 (07:59 IST)
வெப்பச்சலனம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம், தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.