Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Siva
வியாழன், 14 நவம்பர் 2024 (14:25 IST)
நாம் இப்போது நவம்பர் மத்தியில் தான் இருக்கிறோம். டிசம்பருக்குள் இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை தமிழகத்திற்கு காத்திருக்கிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினந்தோறும் இரவில் மழை பெய்வது, சில நாட்களுக்கு தொடரும் என்றும், நள்ளிரவில் சத்தமில்லாமல் மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தென் சென்னைக்கு மீண்டும் நல்ல மழை காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேக கூட்டங்களாக கலைந்து சென்றிருப்பது தமிழகத்திற்கு நல்ல செய்தி என்றும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

இன்று முதல் நாளை வரையில் டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று அவர் தெரிவித்தார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் நல்ல மழை பெய்யும் என்று, மேற்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னையில் இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டம் வராது என்றும், நாம் நவம்பர் மாதம் மத்தியில் தான் இருக்கிறோம். இந்த ஆண்டுக்குள் இன்னும் சிறந்த மழை தமிழகத்திற்கு காத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments