விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை முதல் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருவதாகவும், இந்த சோதனைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவை துடியலூரில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை மற்றும் கோவையில் ஒரே நேரத்தில் அதிகாலை முதல் இந்த சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோதனை குறித்த விவரங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சோதனை முடிந்தவுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனனுக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.