தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (14:20 IST)
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி இன்று குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 
 
இதேபோல சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில பகுதிகளில் மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments