இந்தியாவில் நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக மழைப்பொழிவு தென்மேற்கு பருவமழையால்தான் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை இந்தியாவின் தண்ணீர் தேவையை பல விதங்களில் பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எந்த அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 % முதல் 104 % வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி 99 சதவீதம் மழை பெய்யும் என்றும் இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ அமையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.