தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.