Publish Date: Tue, 08 Jun 2021 (14:04 IST)
Updated Date: Tue, 08 Jun 2021 (15:20 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், குமரி,புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.