Publish Date: Wed, 24 Mar 2021 (10:59 IST)
Updated Date: Wed, 24 Mar 2021 (13:10 IST)
நெல்லை, குமரி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஆம், காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக வரும் 28 ஆம் தேதி வரை நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட நிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.