பிப்.22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என தகவல்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த மாதம் மழை பெய்து வந்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில், பிப்ரவரி 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வளிமண்டல மேலடுக்கின் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.