2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்து ஆலோசனை செய்ய வரும் 13ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய போது, 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனைக்கு கூட்டம் சென்னையில் பிப்ரவரி 13ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வை சிறந்த முறையில், எந்தவிதமான புகார்களுக்கும் இடம் அளிக்காதபடி நடத்தி முடிப்பதற்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தேர்வு தேதிகளும் இந்த கூட்டத்தின் போது முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் அதேபோல தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.