Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

Siva
திங்கள், 17 பிப்ரவரி 2025 (07:41 IST)
தமிழக பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிளஸ் டூ தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்ய அனுமதிக்கலாம் என்றும், மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்த பின்னர், தலைமை ஆசிரியர் அதை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டில் மாற்றம்  தேவைப்பட்டால், தேர்வு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக தேர்வு துறை தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் ஒன் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 19ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments