Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் என் உடலுக்கு இப்படிதான் நன்றி சொல்கிறேன்… தமன்னா பகிர்ந்த தகவல்!

Advertiesment
தினமும் என் உடலுக்கு இப்படிதான் நன்றி சொல்கிறேன்… தமன்னா பகிர்ந்த தகவல்!

vinoth

, வியாழன், 13 பிப்ரவரி 2025 (08:02 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது. காதலர் விஜய் வர்மாவுடன் வசித்து வரும் தமன்னா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் என் உடலை நேசிக்கிறேன். ஒவ்வொரு நாள் முடியும் போதும், நான் ஷவரில் குளிக்கும்போது உடலின் ஒவ்வொரு பாகங்களையும் தொட்டு அதற்கு நன்றி சொல்வேன். இது கேட்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். ஆனால் நான் தினமும் உழைப்பதற்கு உதவும் இந்த உடலை ஆராதிக்க நான் இப்படிதான் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மேடையில் சிம்பு, தனுஷ் & சிவகார்த்திகேயன்… அதர்வா படத்துக்காக ஒன்றிணையும் பிரபலங்கள்!