Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக - கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்தி அணி வகுப்பு மரியாதையுடன் மன்னர் உடைவாள் கேரளா அரசிடம் ஒப்படைப்பு!

தமிழக - கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்தி  அணி வகுப்பு மரியாதையுடன் மன்னர் உடைவாள் கேரளா அரசிடம் ஒப்படைப்பு!

J.Durai

, வியாழன், 3 அக்டோபர் 2024 (09:19 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டம் சுவாமி விக்கிரகங்களான சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் முருகன், பத்பநாதபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சாமி விக்கிரகங்கள் 
 
நேற்று முன்தினம் சுசீந்திரம் கோவிலில் இருந்து யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாதபுரம் அரண்மனை வந்தடைந்தது. 
 
பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்களுடன் புறப்பட்டு குழித்துறை பகுதியில் வந்தடைந்த ஊர்வலம் இரவு ஓய்வுக்கு பிறகு 
 
காலை குழித்துறை மஹா தேவர் கோயிலில்  இருந்து மேள தாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மன்னரின் உடைவாளும் குமரி தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் வந்தடைந்தது.
 
அங்கு இரு மாநில போலீசாரின் அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டது.
 
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நாகாலாந்து ஆளுநர். இல.கணேசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கேரளா சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த சுவாமி ஊர்வலத்தை வரவேற்க வழி நெடுகிலும் பக்தர்கள் கூடியிருந்து பூஜைகள் வைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
அதுபோல இந்த வரலாற்று நிகழ்வை காண குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்களும் பக்தர்களும்  இந்த பகுதியில் குவிந்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை வெளுக்க போகும் மழை சீசன்? படகுகளை வாங்கி குவித்த சென்னை மாநகராட்சி!