ஒரு பக்கம் நீட் தேர்வை ஒழித்து காட்டுவோம் என அரசியல்வாதிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீட் தேர்வில் மாணவர்கள் சாதனை செய்து அரசியல்வாதிகளின் அரசியலை கண்டு கொள்ளாமல் உள்ளனர்
இந்தியாவிலேயே நீட் தேர்வில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாணவர்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து நீட் தேர்வை மாணவர்கள் எழுதிவரும் நிலையில் அதிக அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாநிலத்தை அடுத்து உத்தரப்பிரதேசம் கேரளா பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் மிகவும் குறைவாக உள்ள மாநிலம் திரிபுரா என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் வெறும் 1683 பேர்கள் தான் நீட் தேர்வு எழுதி உள்ளனர்.
ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல்வாதிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வை ஆர்வத்துடன் எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது