Publish Date: Mon, 05 Jul 2021 (08:19 IST)
Updated Date: Mon, 05 Jul 2021 (08:22 IST)
தமிழகத்தில் இன்று முதல் ஒரே மாதியான கூடுதல் தளர்வுகளுடன் இன்று தமிழகம் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஒரே மாதியான தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் இன்று தமிழகம் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி,
1. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து 50% இருக்கைகளில் மட்டும் குளிர்சாதன வசதிகள் இல்லாமல் பயணிக்கலாம்.
2. உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களிலுள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம்.
3. தேநீர்க் கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
4. அனைத்து மாவட்டங்களிலும் கேளிக்கை விடுதிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி.
5. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6. வணிக வளாகங்கள் (Shopping complex / Malls) காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
7. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி.
8. வணிக வளாகங்களிலுள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்கள் இயங்க அனுமதியில்லை.