பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் இ - பதிவு, இ - பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கில் 3 விகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகளை தந்துள்ளது தமிழக அரசு. இதில் மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் இ - பதிவு, இ - பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.