Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'காவல்துறைக்கு NIA-வை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரமில்லை: தமிழக ஆளுனர்

Advertiesment
Governor
, வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:35 IST)
காவல்துறைக்கு NIA-வை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரம் இல்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த சுதந்திரத்தை தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக கவர்னர் தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளார்
 
கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘கோவையில் காஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார் 
 
இந்த சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்து இருக்கிறார்கள் என்றும் அதற்கு எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கை நான்கு நாட்கள் கழித்து NIA-வை அழைத்து விசாரிக்க சொல்லி இருக்கின்றார்கள் என்றும் தமிழ்நாடு காவல் துறைக்கு NIA-வை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரம் இல்லை என்றும் அந்த முடிவை எடுத்தவர் காலம் கழித்து எடுத்து உள்ளார்கள் என்றும்   தமிழ்நாடு அரசை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக கவர்னரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 4ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்: முதல்வர் கலந்து கொள்கிறாரா?