Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் டெல்லி சென்ற ஆளுனர் ரவி.. சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனையா?

RN Ravi
, புதன், 18 ஜனவரி 2023 (12:24 IST)
தமிழக ஆளுநர் ரவி கடந்த வாரம் டெல்லி சென்ற நிலையில் இன்று மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
திமுகவை சேர்ந்த எம்பிக்கள் குழு ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரிடம் மனு அளித்த நிலையில் இன்று ஆளுநர் ரவி டெல்லி செல்லும் செய்தி வெளியாகியுள்ளது. 
 
டெல்லி செல்லும் ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என்றும் தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து அவர் ஆலோசனை செய்வார் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் தான் இருக்கும் நிலையில் ஆளுநர் டெல்லி சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.21 ஆயிரம் வரி செலுத்தாத ஐஸ்வர்யா ராய்.. நோட்டீஸ் அனுப்பிய தாசில்தார்!