Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு?

பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு?
, புதன், 20 டிசம்பர் 2017 (13:42 IST)
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. தினந்தோறும் சுமார் 3 கோடி மக்கள் தமிழக அரசின் பேருந்து சேவையால் பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசு பேருந்துகளின் கட்டணத்தை விரைவில் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதியன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பேருந்து கட்டணத்தை உயர்த்த உத்தரவிட்டார். இதற்கு அந்நேரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, டீசல் விலையேற்றம், டயர்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றால் அரசுக்கு 6500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறினார். எனவே அதை ஈடுகட்டத்தான் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதாக ஜெயலலிதா கூறினார்.
 
இதைத்தொடர்ந்து இப்பொழுது பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 42 பைசாவிலிருந்து 60 பைசா வரை உயர்த்தவும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 56 பைசாவிலிருந்து 73 பைசா வரை உயர்த்தவும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில் 60 பைசாவில் இருந்து 75 பைசா வரை உயர்த்தவும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது குறைந்தபட்சமாக மூன்று ரூபாயாக உள்ள கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளனர். வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பேருந்துகளின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்றவாறு உயரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.வை இப்படி காட்ட வேண்டுமா? - தினகரனிடம் கதறிய விவேக் ஜெயராமன்