தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் நாளில் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சஸ்பெண்ட் நடவடிக்கைகளை தவிர்த்து, விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு, பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இனிமேல், குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட மாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களுக்குரிய பண பலன்களை பெற்று கொள்ள முடியும்.
இதுவரை, ஓய்வு பெறும் நாளில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்களின் பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நடைமுறை இனி பின்பற்றப்படாது.
இந்த திருத்தம், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நேரத்தில் ஏற்படும் மன உளைச்சலை குறைத்து, நேர்மையான விசாரணைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.