Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

Siva
வியாழன், 9 ஜனவரி 2025 (18:13 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பாக அரிசி அட்டை பெறும் குடும்பத் தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு ஆகியவை இன்று முதல் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கும் டோக்கனில் எப்போது பொருள் வாங்க வேண்டும் என்று நேரம், தேதி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த தேதியில் சென்று பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள், மாதத்திற்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளும், இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments