இன்று சுதந்திர தின விழாவில் பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று சென்னை மெரினாவில் நடந்த குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் தற்போது தமிழ்நாட்டிலிருந்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்றும், மறக்கடிக்கப்பட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட தமிழ்நாட்டு சுதந்திர வீரர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கடமை நமக்குள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும். அப்படியான ஆராய்ச்சிகளை செய்து முடிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு கழித்து ராஜ்பவனில் வைத்து கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.