Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளுத்தும் அக்னியிலும் குளிர்ச்சி மழை: வெதர் ரிப்போர்ட்!!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (15:44 IST)
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழையை எதிர்ப்பார்க்கலாம். 
 
நேற்று முதல் அடுத்த 24 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று துவங்கிய அக்னி நட்சத்திர வெயில் மே 28 ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
அதன் பின்னரும் அதன் தாக்கம் ஒரு சில நாட்கள் இருக்கும் என்பதால் இந்த மாதம் முழுவதுமே பொதுமக்கள் வெயிலால் கஷ்டப்பட உள்ளனர். இந்த அக்னி வெயிலிலும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மழை இருந்தாலும் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11. 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments