மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் மே 3 ஆம் தேதி நடைபெற்று இருக்கும். ஆனால் நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வுக்கான பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான புதிய தேதிகள் வரும் மே.5 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன் படி இன்று அதிகாரப்பூர்வ அதேதி வெளியாகியுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதோடு, JEE முதன்மை தேர்வு ஜூலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், JEE ADVANCED தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.