தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் தற்கொலை முயற்சி.. காவல்துறை விசாரணை

Siva
செவ்வாய், 4 நவம்பர் 2025 (10:40 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரான தளபதி பாஸ்கர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
நேற்று இரவு, வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தளபதி பாஸ்கர் மயங்கிய நிலையில் கிடந்தார். முதற்கட்ட விசாரணையில், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
 
அக்கம்பக்கத்தினர் உடனடியாக அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
 
இந்த விபரீத முடிவை அவர் எடுக்க தூண்டியது என்ன? தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வழியாக செல்லும் வந்தே பாரத் உள்பட 4 புதிய ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்...

2வது நாளாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments