Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி திணிப்பு முயற்சியை கைவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (14:09 IST)
இந்தி திணிப்பு முயற்சியை கை விடுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
 
தமிழ்மொழி மட்டுமன்றி அனைத்து மாநில மொழிகளையும் உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும் அலுவல் மொழி தொடர்பாக எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்த கூடாது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் இளைஞர்கள் இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments