Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மாவட்டங்களில் இன்னும் சில மணிநேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (13:29 IST)
20 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. கேரளாவில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது மாவட்டங்கள் வருமாறு:  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை 
 
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments