Publish Date: Sun, 16 Oct 2022 (08:48 IST)
Updated Date: Sun, 16 Oct 2022 (08:50 IST)
இந்திய அணியின் ஹர்ஷல் படேல் ஸ்லோ பந்துகள் வீசி இறுதி ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் திறமையானவராக கருதப்படுகிறார்.
இந்திய அணியில் சமீபகாலமாக டி 20 போட்டிகளில் ஹர்ஷல் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிகளவில் ஸ்லோ பந்துகள் வீசுவது அவரின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போது உலகக்கோப்பை அணிக்கு தயாராகி உள்ள அவர் “என்னால் 24 பந்துகளையும் ஸ்லோ பந்துகளாக வீச முடியும். ஸ்லோ பந்துகள் வீசுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்துவது இந்த விதமான போட்டியில் சிறப்பான ஸ்பெல் என்றே பார்க்கப்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.