Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. பயண திட்டம் என்ன?

Siva
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (07:42 IST)
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் என்றும், அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

முதலீடுகளை ஈர்க்க சென்னையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் முதல்வரின் பயண திட்டம் குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சான்பிரான்சிஸ்கோ சென்றுள்ள நிலையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர் மாநில மாநாட்டில் பங்கேற்கிறார். அதன் பிறகு ஆகஸ்ட் 14ஆம் தேதி அமெரிக்க தமிழ் சங்கத்தினரிடம் சந்திப்பு நடைபெற உள்ளது.

இதனை அடுத்து செப்டம்பர் 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து  சிகாகோ பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் அங்கு அவர் 5 நாட்கள் வெளிநாட்டு தமிழர்களிடம் கலந்துரையாடல், முதலீட்டை ஈர்ப்பதற்காக தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் ஆகியவை நடைபெறுகிறது.

இதன் பின்னர் செப்டம்பர் 11ஆம் தேதி முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை முதல்வர் சந்திக்கிறார். அதன் பின்னர் செப்டம்பர் 12ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments