Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Siva
ஞாயிறு, 16 மார்ச் 2025 (19:42 IST)
தமிழக பட்ஜெட்டில் "ரூ" என குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்ததற்குக் காரணம் என்ன என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கூறியதாவது:
 
"நாம் மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தவே 'ரூ' என்ற எழுத்தை முக்கியத்துவத்துடன் பயன்படுத்தினோம். ஆனால், தமிழ்மொழியை விரும்பாத சிலர் இதை பெரிதாக மாற்றி சர்ச்சை உருவாக்கினர்.
 
மத்திய நிதியமைச்சரே பலமுறை 'ரூ' குறியீட்டை பயன்படுத்தியிருக்கிறார். கல்விக்காக நிதி ஒதுக்கீடு கேட்டபோது மௌனமாக இருந்த மத்திய நிதியமைச்சர், இப்போது 'ரூ' குறித்து பேசுகிறார். ஆங்கிலத்தில்கூட 'Rs' என்றே பயன்படுத்துகிறார்கள். அது பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு 'ரூ' மட்டும் பிரச்சனையாக உள்ளதென்பது ஆச்சரியமானது!"
 
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து வெளிநாட்டு மற்றும் தேசிய அளவிலான ஆங்கில நாளேடுகளில் வெளியான பாராட்டுகளை சுட்டிக்காட்டி, முதல்வர் பெருமிதத்துடன் கூறினார்
 
"தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அனைத்து முன்னணி ஆங்கில நாளேடுகளும் பாராட்டியுள்ளன.
 
TNBudget2025-இல் அனைத்துத் திட்டங்களும் எனக்கு முக்கியமானவையே. இருப்பினும், சில முக்கியமான திட்டங்களை உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments