Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தல் போல், விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது: அண்ணாமலை

Siva
வெள்ளி, 14 ஜூன் 2024 (19:47 IST)
ஈரோடு இடைத்தேர்தல் போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இருக்கக் கூடாது என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். 
 
விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு திமுக சார்பில் அன்னியூர் சிவா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல் இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விரைவில் அதிமுகவும் இந்த தொகுதியில் போட்டியிடுவது யார் என்பது குறித்து அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’விக்ரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் ஈரோடு இடைத்தேர்தல் போல் நடைபெறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் மிக கடுமையாக நடத்த வேண்டும் என்றும் இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் ஆனால் இந்த முறை வரலாறு மாறும் என்று கூறியுள்ளார். கூட்டணி கட்சியான பாமக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டாலும் பாஜக களத்தில் இறங்கி பணியாற்றும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments