Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணன் ஜெயித்த தொகுதியில் தங்கை போட்டி.? காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்..!!

அண்ணன் ஜெயித்த தொகுதியில் தங்கை போட்டி.? காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்..!!

Senthil Velan

, வெள்ளி, 14 ஜூன் 2024 (17:08 IST)
வயநாடு மக்களவைத்  இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு,  ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் ஒரு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி விலக வேண்டிய நிலை உள்ளது. 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்தாக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இரண்டு இடங்களும் காலியாகிவிடும். மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதன்படி ஜூன் 18-ம் தேதிக்குள் ராகுல் காந்தி தனது முடிவை அறிவிக்க வேண்டும். 

இந்நிலையில் இரண்டு தொகுதிகளில் வயநாடு தொகுதியை ராகுல் விட்டு கொடுப்பார் என தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 
 
முன்னதாக ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது சகோதரி என் பேச்சைக் கேட்டு வாராணசி தொகுதியில் நின்றிருந்தால், 3 முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடியை தோற்கடித்திருப்பார் என தெரிவித்திருந்தார்.

 
இதனால் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.  பிரியங்கா காந்தியை வரவேற்று வயநாடு தொகுதியில் ஏற்கனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென கிளம்பிய வதந்தி செய்தி: ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை எச்சரிக்கை..