அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருகிறதா மதிமுக? நயினார் நாகேந்திரன் பதில்..!

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (13:58 IST)
திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் அக்கட்சி கூட்டணி மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "அதிமுக-பாஜக கூட்டணியில்  மதிமுக இணைகிறதா?" என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும், விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும்" தெரிவித்தார். அப்போது, "மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா?" என்ற கேள்விக்கு, "குறிப்பிட்டு ஒரு கட்சியின் பெயரை மட்டும் சொல்ல முடியாது என்றும், ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மை என்றும்" அவர் பதிலளித்தார்.
 
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 
 
"திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை" என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டது மதிமுகவைத்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஜெயலலிதா காலத்தில் அதிமுக கூட்டணியில் வைகோ இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால், வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மதிமுக  மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments