12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

Mahendran
செவ்வாய், 6 மே 2025 (11:09 IST)
12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கடந்த சில நாட்களாக வினா தாள்கள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
 
இந்த நிலையில் தற்போது வினாத்தாள் திருத்தும் பணி முடிவு பெற்று, மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை அடுத்து நாளை மறுநாள், அதாவது மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.
 
முன்னதாக மே 9ஆம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாளைக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்வு துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments