பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரை எம்பி வெங்கடேசன் உள்பட பலர் இதனை சுட்டிக்காட்டி தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில் தேர்வு வைக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொங்கல் மட்டுமின்றி, அதே நாளில் சங்கராந்தி உள்பட ஒரு சில பண்டிகைகள் கொண்டாடப்படுவதையடுத்து, நாடு முழுவதும் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சற்று முன் இது குறித்த மாற்று தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த தேர்வு, தற்போது ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த தேர்வுகள் ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ICAI அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.