தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொடர் கதையாக இருக்கிறது என்றும் இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தும் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
									
										
			        							
								
																	தமிழக முதல்வர் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதும் நேரில் சந்தித்தபோது கூட இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் நேற்று நடந்த நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்தார்கள். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். அது மட்டும் இன்றி மூன்று விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.