Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:02 IST)
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

 
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 
 
மேலும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரம், ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments