Publish Date: Fri, 06 Mar 2020 (13:41 IST)
Updated Date: Fri, 06 Mar 2020 (13:43 IST)
சிஏஏ தொடர்பாக அனுமதியின்றி போராடினால் அவர்களை அப்புறப்படுத்துங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் டிஜிபிக்கு உத்தரவிட்ட நிலையில், அத்தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே பல போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இப்போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
இதனிடையே திருப்பூரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கறிஞர்கள் சிலர் மீண்டும் முறையிட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது.
மேலும் அமைதியான வழியில் போராடியவர்களின் தரப்பு நியாயத்தை கேட்காமல், வழக்கில் உத்தரவிடக்கூடாது எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் மார்ச் 11 ஆம் தேதி கேட்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.