Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராட்டக்காரர்கள் கைது தீர்ப்பு நிறுத்தி வைப்பு: நீதிமன்றம் உத்தரவு!

Advertiesment
போராட்டக்காரர்கள் கைது தீர்ப்பு நிறுத்தி வைப்பு: நீதிமன்றம் உத்தரவு!
, வெள்ளி, 6 மார்ச் 2020 (11:55 IST)
சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வதற்கான உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க வேண்டும் என போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தலைநகரான சென்னையில் போராட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்த வழக்கில் போராட்டக்காரர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று திடீரென கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Yes Bank வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன??