அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவரை வரவேற்று தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, அ.தி.மு.க. கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரகசிய பேச்சுவார்த்தையும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அதற்கேற்றாற்போல், எடப்பாடி பழனிசாமியும் கரூர் சம்பவத்திற்கு 'தமிழக அரசுதான் காரணம்' என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரியில் பரப்புரை கூட்டத்திற்கு வந்தபோது, அவரை வரவேற்றுத் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி செல்லம் என்பவர் பேனர் வைத்துள்ளார். இது அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. கூட்டணி குறித்த பல யூகங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.