Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவால் கிடைத்தது தண்ணீர்; அவர் உடல்நிலைய நினைத்தால் கண்ணீர் : டி.ராஜேந்தர் உருக்கம்

ஜெயலலிதாவால் கிடைத்தது தண்ணீர்; அவர் உடல்நிலைய நினைத்தால் கண்ணீர் : டி.ராஜேந்தர் உருக்கம்

ஜெயலலிதாவால் கிடைத்தது தண்ணீர்; அவர் உடல்நிலைய நினைத்தால் கண்ணீர் : டி.ராஜேந்தர் உருக்கம்
, ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (15:34 IST)
தமிழ முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை நிலைத்தால் உண்மைத் தமிழர்களின் நெஞ்சம்  கண்ணீர் வடிக்கிறது என்று நடிகரும், லட்சிய திமுக தலைவரான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், அவரின் உடல் நிலை காரணமாக தனது பிறந்த நாளை கூட கொண்டாட மனம் வரவில்லை என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நாளை, அக்.3 எனது பிறந்தநாள் வருகிறது. ஒரு காலகட்டத்தில் என் பிறந்தநாளை பல ஏழைகளுக்கு உதவும் நாளாக கொண்டாடி வந்தேன். ஆனால் சில காலமாக நான் என் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை, காரணம் பெரிதாக நான் ஏதும் சாதனைகள் நிகழ்த்தியதாக நினைக்கவில்லை. என்னை பெரிய அதிகாரத்தில், அந்தஸ்தில் இருப்பவனாக கருதவில்லை.
 
ஆனால் என் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொண்டு, அன்று என்னை வந்து சந்திக்கும் லட்சிய தி.மு.க. தொண்டர்களையும், என் ரசிகர்களையும், அபிமானிகளையும் சந்திக்காமல் இருந்ததில்லை.
 
ஆனால் இந்தமுறை காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராமல் உச்ச நீதிமன்றம் வரை உரிமைக்குரல் எழுப்பிய உன்னத பெண்மணியாக செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்கிறேன். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், என் பிறந்த நாளன்று வழக்கமாக நான் சந்திக்கும் என் ரசிகர்களைக்கூட சந்திக்கும் மனநிலை எனக்கில்லை.
 
நான் பிறந்த தஞ்சை தரணி காவிரி நீருக்காக திண்டாடும்போது என் மனம் பிறந்தநாள் கொண்டாடுமா? ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கப்போராடி உச்சநீதிமன்றம் வரை உன்னத குரலை உயர்த்திய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால்தான் காவிரியில் கொஞ்சமாவது வந்து கொண்டிருக்கிறது தண்ணீர்.
 
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை நினைத்தால் உண்மைத் தமிழர்களின் நெஞ்சம் வடிக்கிறது கண்ணீர். தமிழகத்தின் உண்மை நலவிரும்பிகள் யாராக இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து மக்கள் நலப்பணியாற்ற திரும்ப வேண்டுமென, எல்லாம்வல்ல இறைவனிடம் செய்வோம் பிரார்த்தனை. என்றுமே நல்லோருக்கு இறைவன்தான் துணை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆற்றைக் கடந்தபோது 5 குழந்தைகளுடன் தாயும் பலியான சோகம்